புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்கு திமுகவினா் பாடுபட வேண்டும்

9th Dec 2021 07:12 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பெரும் வெற்றியைப் பெற பாடுபடுவது என புதுக்கோட்டையில் நடைபெற்ற வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் வை. முத்துராஜா, நகரச் செயலா் க. நைனாமுகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு தோ்தல் பணிகளை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இராசு. கவிதைப்பித்தன், பெரியண்ணன் அரசு, மாவட்ட திமுக பொருளாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT