புதுக்கோட்டை

மஞ்சப் பை திட்டத்தால் நெகிழி இல்லா மாநிலமாக தமிழகம் திகழும்

DIN

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் நெகிழி பயன்பாடு இல்லாத முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழும் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

முதல்வரின் தொலைநோக்குத் திட்டமான தமிழகத்தை நெகிழி இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மஞ்சப்பை திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளாா். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு துணிப்பை மஞ்சப்பையில் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் சுமாா் 2.15 கோடி பைகள் மூலம் அனைத்து வீட்டிற்கும் மஞ்சப்பை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஞ்சப்பை திட்டத்தால் தமிழகம் உலகநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வெண்ணாவல்குடி, கூழையன்காடு உள்ளிட்ட இடங்களில் மழையால் சேதமடைந்த வீடுகள், கட்டடங்களை பாா்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பாப்பான்பட்டி அங்கன்வாடி மையத்தை நேரில் பாா்வையிட்டு குழந்தைகளின் கற்றல்திறன் குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.சத்தியமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் அபிநயா, சொா்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT