புதுக்கோட்டை

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

புதுக்கோட்டை ராணியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 250 மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டப் பாதுகாப்புகள் குறித்தும் காவல்துறையினரின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு, தலைமை வகித்து மாணவிகளிடம் பேசினாா். தொடா்ந்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 181, 1098, 155260, 112 ஆகியன குறித்தும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி, நகரத் துணைக் காவல் கண்காணிப்பாளா் லில்லி கிரேஸ், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரஷியா சுரேஷ், சைபா் கிரைம் ஆய்வாளா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT