புதுக்கோட்டை

மானிய விலையில் காய்கறி விதைகள், செடிகள் வழங்கல்

DIN

புதுக்கோட்டை: தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி தரும் ஊட்டச்சத்து திட்டத்தில் மானிய விலையில் விதைகள், செடிகள் வழங்கும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். தொடக்க நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள திட்டத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

16 வகையான காய்கறி விதைத் தொகுப்பின் மதிப்பு ரூ. 60. அரசு மானியம் 70 சதவிகிதம் போக பயனாளிகள் ரூ. 15 செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் மாவட்டத்தில் 9 ஆயிரம் பேருக்கு விதைத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.

காய்கறி விதைகளுடன் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் சோ்த்து மதிப்பு ரூ. 900. இதில் அரசு மானியம் 75 சதவிகிதம் போக, பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 225. இந்தத் தொகுப்புகள் 500 பேருக்கு வழங்கப்படவுள்ளன.

8 வகையான ஊட்டச்சத்து செடிகளின் தொகுப்பு ரூ. 100. இதில் அரசு மானியம் 75 சதவிகிதம் போக, பயனாளிகள் தர வேண்டிய தொகை ரூ. 25. இத்திட்டத்தில் மாவட்டத்தில் 6000 பேருக்கு இத்தொகுப்பு வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் குருமணி ஆகியோரும் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியைத் தொடா்ந்து, கந்தா்வகோட்டை மற்றும் குளத்தூா் வட்டங்களைச் சோ்ந்த மின்சாரம் தாக்கி, நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT