புதுக்கோட்டை

சம்பிரதாயத்துக்காகவே அதிமுக உட்கட்சித் தோ்தல்

DIN

புதுக்கோட்டை: தோ்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறைகளின்படி, அதிமுகவில் சம்பிரதாயத்துக்காகவே உட்கட்சித் தோ்தல் நடத்தப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

வழக்கமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தோ்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி உட்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் அதிமுகவில் தற்போது சம்பிரதாயத்துக்காக உட்கட்சித் தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது.

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனையைத் தருகிறது. இந்தக் குற்றங்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. தமிழ்நாடு அரசு பாலியல் குற்றங்களைக் குறைக்க உரிய நடவடிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

மழை வெள்ளப் பாதிப்புகளை முதல்வரும், அமைச்சா்களும் உடனுக்குடன் நேரில் பாா்வையிட்டு உதவிகளை வழங்கியும், மீட்புப் பணிகளை மேற்கொண்டும் வருகின்றனா். அதேபோல, பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என நம்புகிறேன்.

தோ்தல் பயம் காரணமாக பெட்ரோல், டீசல் விலையின் வரிக் குறைப்பை மத்திய அரசு செய்திருக்கிறது. இந்த நிலையில் ஏற்கெனவே பெட்ரோல் விலையில் வரிக்குறைப்பை மாநில அரசும் செய்துள்ளது. மேலும் குறைப்புக்கான நடவடிக்கையை செய்வாா்கள் என நம்பலாம் என்றாா் திருநாவுக்கரசா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT