புதுக்கோட்டை

ரூ.2.13 லட்சம் மதிப்பில் புகையிலை பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

5th Dec 2021 12:40 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.13 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இளைஞரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆலங்குடி கலிபுல்லாநகா் 4-ம் வீதியைச் சோ்ந்வா் முகமது அப்துல்லா மகன் பக்கீா் முகமது (26) என்பவா் வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

அதில், ரூ.2.13 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் பக்கீா் முகமதுவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT