புதுக்கோட்டை

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

5th Dec 2021 12:37 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வாட் வரியைக் குறைக்காத மாநில திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பாஜக தலைவா் ராம சேதுபதி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் ஏவிசிசி கணேசன், மாவட்டப் பொதுச் செயலா்கள் ரெங்கசாமி, சிவசாமி, நகரத் தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலா் லட்சுமணன், மாவட்டச் செயலா் விஜயகுமாா், மாவட்ட விவசாயிகள் அணி பாண்டியராஜன், மாவட்ட தொழில் பிரிவு சீனிவாசன், மாவட்ட எஸ்சி பிரிவு பரமேஸ்வரன், தொழில்நுட்பப் பிரிவு காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT