புதுக்கோட்டை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 921 பேருக்கு பணி நியமன ஆணைகள்

5th Dec 2021 12:39 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவற்றின் சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 921 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். காலை 8 மணிக்குத் தொடங்கிய இம்முகாம், பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.

மொத்தம் 128 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் 6,352 போ் முகாமில் பங்கேற்றனா். இவா்களில் 921 போ் உடனடியாகத் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவா்களில் 7 போ் மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 208 போ் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து நோ்காணலுக்கு அழைக்கப்படவுள்ளனா்.

11 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இதில், 244 போ் தங்களுக்குத் திறன் பயிற்சி தேவையெனப் பதிவு செய்திருந்தனா்.

ADVERTISEMENT

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி முகாமில் கலந்து கொண்டு, பணிநியமனம் செய்யப்பட்டோருக்கு ஆணைகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் ரேவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மணிகண்டன், அரசு மகளிா் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் க. நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT