புதுக்கோட்டை

மருதாந்தலையில் மருத்துவ முகாம்

5th Dec 2021 12:37 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், மருதாந்தலையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் மழைக்கால இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை, மருதாந்தலை ஊராட்சித் தலைவா் ரேணுகாதேவி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிமுத்து ஆகியோா் தொடங்கி வைத்தனா். டீம் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.எச். சலீம் தலைமையில் இருக்கை மருத்துவ அலுவலா் முஸ்தபா உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை மருத்துவமனையின் காப்பீட்டுத் திட்ட அலுவலா் சக்திவேல், மேலாளா் ஜோசப், தொடா்பு அலுவலா் கௌசல்யா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT