புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயிலில் மூல மந்திர யாகம்

5th Dec 2021 12:39 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மூல மந்திர மஹா யாக பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மூல மந்திரம் மஹா யாக பூஜை சுரேஷ் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், 108 மங்களப் பொருள்கள் கொண்டு மகா யாகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம், தயிா், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT