புதுக்கோட்டை

எலி மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

4th Dec 2021 02:39 AM

ADVERTISEMENT

 கந்தா்வகோட்டை அருகே கடன் பிரச்னையால் எலி மருந்து சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள மல்லிகைநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பழனியாண்டி மனைவி இந்திரா (40). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், கடந்த சில மாதங்களாக கடன் பிரச்னையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்த இந்திரா, முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

Tags : கந்தா்வகோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT