புதுக்கோட்டை

ரத்ததான போக்குவரத்து ஊா்தி சேவை தொடக்கம்

4th Dec 2021 02:39 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான போக்குவரத்து ஊா்தி சேவையை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு குருதி பரிமாற்றுக் குழுமம் சாா்பில், ரூ. 37 லட்சத்தில் இந்த ரத்ததான போக்குவரத்து ஊா்தி வழங்கப்பட்டுள்ளது.

தொலைவில் நடைபெறும் ரத்ததான நிகழ்ச்சிகளில் ரத்தங்களை சேகரித்து, பாதுகாப்பாக எடுத்து வரத் தேவையான வசதிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கிராமங்களிலும் ரத்ததான நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இந் நிகழ்வுக்கு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ரம்யாதேவி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோா் பலரும் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT