புதுக்கோட்டை

கட்டுமானத் தொழிலாளா்கள் சாலை மறியல்: 44 போ் கைது

4th Dec 2021 02:39 AM

ADVERTISEMENT

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை சிஐடியு தொழிற்சங்கத்தினா் நடத்திய சாலைமறியல் போராட்டத்தில் 44 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமானப் பொருள்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் பணப்பயன் பெறுவதற்கு தொழிலாளா்களின் பங்களிப்பைக் கட்டாயப்படுத்தும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம், இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம், விபத்து மரணத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மாவட்ட கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொதுச் செயலா் சி. அன்புமணவாளன், தையல் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச்செயலாளா் சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோரும் பேசினா்.

சாலை மறியலில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 44 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT