புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

4th Dec 2021 02:38 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து நலத்திட்டஉதவிகளை வழங்கினாா். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 81 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், காதொலிக் கருவி, கற்றல் உபகரணங்கள், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி உள்ளிட்ட ரூ. 43.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், மாவட்ட சமூக நல அலுவலா் ரேணுகா, மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் திரிபுரசுந்தரி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் பிரேம்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT