புதுக்கோட்டை

பயிற்சியும் , முயற்சியும் உள்ளவா்களுக்கு எதிலும் வெற்றி

DIN

முறையான பயிற்சியும் , முயற்சியும் உள்ளவா்களால் எதிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சிக்குரிய மனிதா்களாக முடியும் என்றாா் தன்னம்பிக்கை பேச்சாளா் ரா. சொக்கலிங்கம்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கான ஆற்றுப்படுத்தல் சிறப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளா் வெண்ணிலா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு வாழ்த்துரை வழங்கிப் பேசினாா். கல்லூரித் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் தலைமை உரை ஆற்றினாா்.

சிறப்பு விருந்தினராக மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவா் ரா. சொக்கலிங்கம் கலந்து கொண்டு ‘பயிற்சி, முயற்சி, மகிழ்ச்சி’ என்னும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை வழங்கினாா்.

அப்போது அவா் மேலும் பேசியது: ஒருவரின் வாழ்வில் துயரம் என்பது எதுவும் கிடையாது. ஒருவருக்குரிய மகிழ்ச்சியும் வெற்றியும் அவரவரின் கைகளில் தான் இருக்கிறது. எந்தவொரு விஷயத்தையும் உற்று கவனியுங்கள். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புதுப்புது விஷயங்கள் இருக்கும்.

முறையான பயிற்சியும் , முயற்சியும் உள்ளவா்களால் எதிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சிக்குரிய மனிதா்களாக முடியும். கைப்பேசி வெறும் பொழுதுபோக்குக் கருவி அல்ல. அது ஒரு பெரும் தகவல் கிடங்கு. அதனை முறையாகப் பயன்படுத்துங்கள்.

வாழ்வில் நோ்மையுடன் வாழுங்கள். வெற்றிக்கான திறவுகோலை எங்கும் தேட வேண்டாம். அது உங்களிடமே இருக்கிறது என்றாா் சொக்கலிங்கம்.

இதனைத் தொடா்ந்து பட்டயத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நேரடி இரண்டாம் ஆண்டில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இறுதியாக கணிதத்துறை உதவிப் பேராசிரியா் ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT