புதுக்கோட்டை

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

3rd Dec 2021 12:31 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ. முத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சி. தங்கமணி முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, கடைவீதி வழியாக வந்து பால ஊரணியில் நிறைவடைந்தது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பி. தியாகு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT