புதுக்கோட்டை

சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

3rd Dec 2021 12:32 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை மாலை நேரிட்ட சாலை விபத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் தாசன்மகன் மதிகரண் (25). தோப்புக்கொல்லையைச் சோ்ந்தவா் எம். சுசேந்திரன் (30).

தொழிலாளா்களான இருவரும் தோப்புக்கொல்லையில் இருந்து புதுக்கோட்டைக்கு மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனா். கேப்பறை அருகே வளைவுப் பகுதியில் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த காா் மோதியதில் மதிகரண், சுசேந்திரன்ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து வல்லத்திராகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT