புதுக்கோட்டை

நாளை புதுகையில் வேலைவாய்ப்பு முகாம்

3rd Dec 2021 12:31 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (டிச. 4) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் இம்முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களைத் தோ்ந்தெடுக்க உள்ளனா். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளனா். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, பட்டயம், செவிலியா் படிப்புகளை முடித்த, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்களும் கலந்து கொள்ளலாம்.

வரும்போது, தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை, புகைப்படம் மற்றும் கல்வி, சாதிச் சான்று நகல்களுடன் வர வேண்டும். காலை 8 மணி முதல் மாலை 3 வரை இம்முகாம் நடைபெற உள்ளது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைக்கின்றனா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகிக்கிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT