அன்னவாசல் வட்டம், தொடையூா், மாங்குடி, வெட்டுக்காடு ஆகிய கிராமங்களில் மண்வள தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநா் பழனியப்பா தலைமை வகித்துப் பேசினாா். இதில்,
இயற்கையாகவே மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் சாகுபடிக்கு முன் நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5 டன் வீதம் இட்டு சாகுபடி மேற்கொள்ளலாம். மண் பரிசோதனை மிகவும் அவசியம். இதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்துவதோடு உணவு உற்பத்தியையும் அதிகரிக்கலாம் எனக் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில், வேளாண் அலுவலா் கருப்பசாமி, நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்துத் தெரிவித்தாா்.
ஏற்பாடுகளை, உதவி வேளாண் அலுவலா் சாவித்திரி, அருண்மொழி, பாஸ்கா், உதவி தொழல்நுட்ப மேலாளா் நவாப் ராஜா, தேவி ஆகியோா் செய்திருந்தனா்.