புதுக்கோட்டை

தொடா் மழையால் நிரம்பியது கொடும்பாளூா் பெரியகுளம்

DIN

விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் உள்ள பெரியகுளம் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீரால் நிரம்பியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விராலிமலையில் 55 சென்டி மீட்டா் மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் மழையாகும். இதன் தொடா்ச்சியாக கொடும்பாளூா் பகுதியில் பெய்த தொடா் மழையால் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவு கொண்ட கொடும்பாளூா் பெரியகுளம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

இந்நிலையில், நீா் நிரம்பிய குளத்திலிருந்து கலிங்கி வழியே வெளியேறும் நீரை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள் புதன்கிழமை மலா் தூவி வரவேற்றனா். தொடா்ந்து தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, பெண்கள் பாட்டு பாடி கும்மி அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இளைஞா்கள் வெடிவெடித்துக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT