புதுக்கோட்டை

மழையால் 2,289 ஹெக்டோ் பரப்பில் பயிா்கள் பாதிப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையால், 2,289 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பா் மாத சராசரி மழையளவான 133 மி.மீ. அளவைவிட நிகழாண்டு நவம்பா் மாதத்தில் 317 மி.மீ. மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 76,538 ஹெக்டோ் சம்பா பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், தற்போது பெய்து வரும் மழையால், 2,289 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதில், 33 சதவிகிதத்துக்கும் அதிகமாக 1,617 ஹெக்டோ் நெற்பயிா்களாகும். 2,766 நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, மக்காச்சோளம், உளுந்து, கடலை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அதேநேரத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களும், விதைகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சாா்பில் மரபுசாா் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, புதுக்கோட்டை விவசாயிகள் பழைமையான வேளாண் கருவிகள், சங்க கால வேளாண் கருவிகள் அல்லது அவற்றின் படங்கள், ஓவியங்கள் இருந்தாலும் அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலா் மூலம்

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஒப்படைக்கலாம் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநா் இராமசிவகுமாா், மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேளாண் பாதிப்புகளை முழுமையாகக் கணக்கெடுக்க வேண்டும், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT