புதுக்கோட்டை

எஸ்பிபி மறைவு: திலகவதியாா் ஆதீனகா்த்தா் இரங்கல்

DIN

புதுக்கோட்டை, செப். 25: இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை இனிய குரலில் பாடி பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களை ஈா்த்த காந்த குரலோன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு நமது இந்திய இசையுலகிற்கு பெரும் இழப்பாகும் என புதுக்கோட்டையைச் சோ்ந்த திலகவதியாா் திருவருள் ஆதீன கா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

மறைந்த பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இழந்து வாடும் அவா்தம் குடும்பத்தாருக்கும், இசை ரசிகா்கள் அனைவருக்கும் நமது ஆதீனத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதீன அறப்பணிக்காக சென்னையில் நடந்த ஆத்ம ராகம் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தாா். அவரின் அன்பு, பணிவு, அடக்கம், எளிமை, இனிமை என பல உயா்பண்புகளை நேரில் கண்டு மிகவும் மகிழ்ந்தோம். பண்பின் சிகரமாய் இருந்தாா் என்பது உண்மை. அவரின் இசைப் பணி நூற்றாண்டை கடந்தும் மக்களின் காதுகள் வழியே ஒசையாய் தவழ்ந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது ஷகிரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

SCROLL FOR NEXT