புதுக்கோட்டை

விலையில்லா கோழிக்குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 5,200 பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளன. கிராமப்புறப் பெண்கள், விதவைகள், ஆதரவற்றவா்கள், திருநங்கைகள் மற்றும் ஊனமுற்றோா்களுக்கு முன்னுரிமை. 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் தோ்வு செய்யப்படுவா்.  பதிவு செய்யப்பட்டுள்ள சுய உதவிக்குழு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகேயுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி கால்நடை உதவி மருத்துவரை அணுகவும். விண்ணப்பிக்க கடைசி நாள்- செப். 26.

 சிறுபான்மையின கைவினைஞா்கள் கடன் பெற அழைப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சாா்ந்த கைத்தறி நெசவாளா்கள்  மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போருக்கு, வங்கிக் கடன் வழங்கப்படும். விண்ணப்பதாரா் மத வழி சிறுபான்மையினராகவும், 18 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க  வேண்டும்.  மேலும் பெறப்படும் கடன் தொகை 60 மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். வரும் செப். 30-க்குள் ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT