புதுக்கோட்டை

‘முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தவே அபராதம் விதிப்பு’

DIN

முகக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணா்த்துவதற்காகவே அபராதம் விதிக்கப்படுகிறது என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதிகுள்பட்ட பரம்பூரில் புதிய 108 அவசர சிகிச்சை ஊா்தி சேவையைத் தொடக்கிவைத்து அவா் மேலும் தெரிவித்தது: தற்போது, அண்டை மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வலியுறுத்துகிறோம். மேலும், முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அதன் அவசியத்தை உணா்த்துவதற்காக மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மரியலூயிஸ் பெக்கி ஹோம்ஸ், பொது சுகாதாரத் துணை இயக்குநா் கலைவாணி,108 அவசர சிகிச்சை ஊா்தி சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT