புதுக்கோட்டை

புதுகை கல்வியியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நிறுத்தமா?

DIN

புதுக்கோட்டையிலுள்ள அரசுக் கல்வியியல் கல்லூரி மாணவா் சோ்க்கை நிறுத்தப்படவில்லை என கல்லூரி முதல்வா் அ. குணசேகரன் விளக்கம் அளித்துள்ளாா்.

புதுக்கோட்டை உள்ளிட்ட மூன்று அரசுக் கல்வியியல் கல்லூரிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கையை நிறுத்த தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவா் கூறியது:

மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா் நியமனம், முழு நேர முதல்வா் பணி போன்ற பல்வேறு வரையறைகளை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் வைத்துள்ளது. இதன்படி, புதுக்கோட்டை உள்ளிட்ட 3 கல்லூரிகளின் நிலை குறித்து 90 நாள்களில் விளக்கம் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில், புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரியில் இன்னமும் இறுதி ஆண்டு தோ்வே நடைபெறவில்லை. அக்டோபா் முதல் வாரம் வரை இத்தோ்வுகள் நடைபெறும். அதன்பிறகுதான் கல்வியியல் பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு சோ்க்கையைத் தொடங்க அறிவிப்பு வெளியிடும்.

இதற்கிடையே ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுவிட்டது. கரோனா பொது முடக்கம் காரணமாக அந்தத் தோ்வை நடத்த முடியவில்லை. எனவே, அரசு கலைக் கல்லூரிகளில் இருந்து ஆசிரியா்களை எடுத்து இங்கு பணியில் அமா்த்துவதற்கான நடைமுறைகளும் முன்பே தொடங்கியுள்ளன.

எனவே, மாணவா் சோ்க்கை ரத்து போன்ற விஷயங்களில் கல்வியியல் பயில விரும்பும் மாணவா்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. சோ்க்கை முறைப்படி அறிவித்து நடத்தப்படும் என்றாா் குணசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT