புதுக்கோட்டை

கிசான் திட்ட முறைகேடு: நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வலியுறுத்தல்

DIN

கிசான் நிதித் திட்ட முறைகேடு குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்துக்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் கிசான் சம்மன் நிதித் திட்டத்தில் இடைத்தரகர்கள் மூலம் பரவலாக முறைகேடு நடைபெற்றுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விசாரணை நடத்தப்படுகிறது.

பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் இயல்பு பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுளது. நோத்தொற்றும் குறைந்தபாடில்லை. எனவே மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்ளை 200 நாட்களாக விரிவுபடுத்துவதுடன், ஊதியத்தை ரூ. 600 ஆக உயர்த்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் அக். 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் லாசர். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

SCROLL FOR NEXT