புதுக்கோட்டை

சுங்கச்சாவடியை மூடக்கோரி புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நூதனப் போராட்டம்

14th Sep 2020 12:59 PM

ADVERTISEMENT

சுங்கச்சாவடியை மூடக்கோரி மாட்டு வண்டியில் வந்து புறா மூலம் தூது அனுப்பும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இந்த நூதனப் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை - திருச்சி சாலையிலுள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும், களமாவூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 போராட்டத்தில் கலந்து கொண்டோர் 'என் ரோடு, என் உரிமை; டோல் தர முடியாது போடா' என்ற வாசகங்கள் பொறித்த பனியன் அணிந்திருந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : pudukkottai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT