புதுக்கோட்டை

அம்பேத்கர் சிலை முன் சீர்திருத்தத் திருமணம்!

14th Sep 2020 11:46 AM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கர் சிலை முன்பாக சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பெற்றோர் உறவினர்கள் வாழ்த்தினர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புது விடுதியைச் சேர்ந்த அம்பிகாபதி மகன் ராஜேந்திரன், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகள் ஜானகி இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு, திருமணம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் வே.ம. விடுதலைக்கனல் தலைமையில் திருமணம் நடைபெற்றது. 

இதில் கட்சியின் மாநில துணைச்செயலாளர் கோ. செந்தமிழ்வளவன், நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் மு.கண்ணையன், தொகுதி செயலாளர் மருத. பார்வேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் த. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

Tags : pudukkottai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT