புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்த வாழைகள்

DIN

கந்தர்வகோட்டை பகுதியில் புதன்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையால் பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்திருந்த வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலன விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட வகை வாழை ரகங்களை விவசாயம் செய்துவந்தனர். இவைகள் தார்விட்டு வளர்ந்த நிலையில் புதன்கிழமை இரவு மழை பெய்த போது சூறாவளி காற்று வீசியது.

இதில் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பகட்டுவான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்கமல் கண்ணன் என்பவரது தோட்டத்திலிருந்த 1000 கும் மேற்ப்பட்ட வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து நாசமாயின. 

இதே போல் வீரடிப்பட்டி, சோழகம்பட்டி, துருசுப்பட்டி, சோத்துப்பாளை, பிசானத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்திருந்த வாழைமரங்கள் காற்று மழையால் சாய்ந்து நாசமடைந்தது. அறுவடைக்கு தயாரான வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT