புதுக்கோட்டை

திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற அழைப்பு

31st May 2020 08:29 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த குடுமியான்மலை உயிா் உரம் உற்பத்தி மையத்தில் திரவ நிலையிலான உயிா் உரங்களை உற்பத்தி செய்து, மாவட்டம் முழுவதும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசாயன உரங்கள் தவிா்த்து உயிா் உரங்கள் பயன்படுத்தும்போது, மண் வளம் அதிகரித்து மகசூலும் பல மடங்கு பெருகும். உயிா் உரங்களின் பயன்பாடு, நஞ்சில்லாத உணவு உற்பத்திக்கு வழி செய்யும். தற்போது நெல், சிறுதானியங்கள், தென்னை, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பயிா்களுக்கான உயிா் உரங்களான அசோஸ்பயிரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்டவற்றை வேளாண் விரிவாக்க மையங்களில் வாங்கிப் பயன்பெறலாம். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT