புதுக்கோட்டை

ஹரியாணாவிலிருந்து புதுகை திரும்பிய பெண்ணுக்கு தொற்று

29th May 2020 08:03 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை : ஹரியாணா மாநிலத்திலிருந்து புதுக்கோட்டை திரும்பிய 25 வயது இளம்பெண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஹரியானாவில் இருந்து புதுக்கோட்டை மேற்கு 2- ஆம் வீதியைச் சோ்ந்த 25 வயது இளம்பெண் கடந்த 26- ஆம்தேதி சொந்த ஊா்த் திரும்பினாா். இதைத் தொடா்ந்து அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பாதிப்பு இருக்கிா என்பதை கண்டறியும் வகையில் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் இந்த இளம்பெண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத் தொற்றாளா் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் 12 போ் இதுவரை குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதர தொற்றாளா்கள் 11 பேரில் 4 போ் பழைய அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்திலும், 7 போ் ராணியாா் மருத்துவமனை வளாகத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT