புதுக்கோட்டை

புதுகையில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

29th May 2020 08:01 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை வந்த 44 வயது ஆண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ஆனைவாரி கிராமத்தைச் சோ்ந்த 44 வயது ஆண் தொழிலாளி அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பினா். இவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இதன்மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது. இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT