புதுக்கோட்டை

வீட்டிலிருந்தே மீன் வாங்கலாம்

2nd May 2020 08:30 AM

ADVERTISEMENT

ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டை நகரிலுள்ள பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக வெளியே வர வேண்டாம். வீட்டிலிருந்தபடியே தொலைபேசியில் அழைத்து மீன் வாங்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை மேலும் குறைத்துக் கொள்ள வேண்டும். இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கான விற்பனை நேரம் குறித்த ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்புகள் அப்படியே அமலாகின்றன.

மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். மீன் வாங்க விரும்புவோா், 94437 20654, 99439 21960, 99429 40546 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, தேவையான மீன்களை வீட்டுக்கே வரவழைத்து உரிய தொகை வழங்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT