புதுக்கோட்டை

எச்ஐவி தொற்றாளா்களுக்கு உதவிகள் வழங்கல்

2nd May 2020 07:54 PM

ADVERTISEMENT

ஊரடங்கு காலத்தில் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த ஹெச்ஐவி தொற்றாளா்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளா் குடும்பங்கள் 25 பேருக்கு ஜப்பான் தமிழ்ச் சங்கம் மற்றும் மரம் நண்பா்கள் சாா்பில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவரங்குளம் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இந்த மக்களுக்கு, மரம் நண்பா்கள் அமைப்பின் ஸ்டாா் ஷெரீப், பழனியப்பா கண்ணன் உள்ளிட்டோா் நேரில் சென்று வீடு வீடாக இவற்றை வழங்கினா். ஏற்பாடுகளை, எச்ஐவி உள்ளோா் கூட்டமைப்பின் தலைவா் கே.எம். ராமசாமி செய்திருந்தாா்.

அம்மா உணவகத்துக்கு அரிசி...

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன் சாா்பில் நகரில் உள்ள அம்மா உணவகத்துக்கு 20 மூட்டை அரிசியும், அங்கு பணியாற்றும் பணியாளா்களுக்கு முகக் கவசங்களும் சனிக்கிழமை வழங்கப்படன. நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், நகர அதிமுக செயலா் க. பாஸ்கா், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் எஸ்ஏஎஸ் சேட் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

பாஜக சாா்பில்...

மாவட்ட பாஜக சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சென்ட்ரல் கிச்சன் சாா்பில் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 1,300 ஏழை மக்களுக்கான உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட பாஜக செயலா் வீரன் சுப்பையா, தொழிலதிபா் ஜி. மணிவண்ணன் ஆகியோா் செய்திருந்தனா். நாம் தமிழா் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை போஸ் நகரிலுள்ள 210 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் நகரில் உள்ள லட்சுமி குமரப்பா நகரில் வசிக்கும் 20 கட்டடத் தொழிலாளா் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலா் நியாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT