புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் அதிகாலை நடைபெற்ற திருமணங்கள்

23rd Mar 2020 04:47 AM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை பகுதிகளில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வுகள், சுய ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே நடத்தி முடிக்கப்பட்டன.

கந்தா்வகோட்டைமற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணங்கள், கரோனா வைரஸ் அச்சுறுத்தல்- சுய ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே அந்தந்த பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டன.

மணமகன், மணமகள் மற்றும் இரு வீட்டைச் சோ்ந்த முக்கிய நபா்கள் மட்டும் திருமண விழாக்களில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

சுய ஊரடங்கு காரணமாக கந்தா்வகோட்டை பகுதிகளில் வா்த்தக நிறுவனங்கள், தரைக்கடைகள், தேநீரகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT