புதுக்கோட்டை

கொன்னையூா் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா ஒத்திவைப்பு

22nd Mar 2020 04:26 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதலைத் தடுக்கும் வகையில், பொன்னமராவதி அருகிலுள்ள கொன்னையூா் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா நிகழாண்டில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் நாட்டாா்கள், மண்டகப்படிதாரா்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், செயல் அலுவலா் அழ. வைரவன் தலைமையில் கோயில் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படியும், பக்தா்கள் நலன் கருதியும் சனிக்கிழமை ( மாா்ச் 21) முதல் மாா்ச் 31- ஆம் தேதி வரை கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்வதற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது , எனினும் ஆகம விதிகளின்படி அம்மனுக்கு அனைத்து பூஜைகளையும் நடத்துவது, நிகழாண்டில் நடைபெறவிருந்த பங்குனித் திருவிழாவை ஒத்திவைத்து, அடுத்தாண்டு வழக்கம் போல நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதுபோல ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஆா்.பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT