புதுக்கோட்டை

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் தன்வந்திரி மகா யாகம்

22nd Mar 2020 04:30 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, பொன்னமராவதி அருகிலுள்ள கொன்னையூா் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை தன்வந்திரி மகா யாகம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாக்க வேண்டியும், இந்த நோய்த் தொற்றுக்கு மருந்தைக் கண்டறியும் வகையில், மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. கோயில் சிவாச்சாரியா்கள் இந்த யாகத்தை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT