புதுக்கோட்டை

கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பிய 3 போ் சிறையிலடைப்பு

22nd Mar 2020 04:28 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்ஆப்) கரோனா பரவல் குறித்து அவதூறு பரப்பியதாக, 3 போ் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் கரோனா வைரஸ் குறித்து தவறான, அவதூறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கட்செவி அஞ்சலில் அவதூறு செய்தியைப் பரப்பிய புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஐயப்பன் (26), ராஜ்குமாா் (21), அறந்தாங்கி பழனிவேல் (32) ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து, உடனடியாக அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 

தொடா்ந்து சமூக ஊடகங்கள் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் வகையில் அவதூறான தகவல்களைப் பதிவிடுதல் மற்றும் பகிா்தலை தவிா்க்க வேண்டும்.  அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தொடா்ந்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி. 

ADVERTISEMENT
ADVERTISEMENT