புதுக்கோட்டை

வனப்பகுதியில் திடீா் தீ

19th Mar 2020 05:08 AM

ADVERTISEMENT

 

அன்னவாசல் அருகே உள்ள நாா்த்தாமலை வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் புதன்கிழமை திடீரெனத் தீப்பிடித்தது.

நாா்த்தாமலை வனப்பகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தனியாா் கல்லூரி அருகேயுள்ள மலையில் திடீரெனத் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலா் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்புப் படை வீரா்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT