புதுக்கோட்டை

தனியாா் கல்லூரிப் பேருந்து மோதி சைக்கிளில் சென்றவா் பலி

16th Mar 2020 07:57 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை அருகே சனிக்கிழமை இரவு தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்றவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). இவா், சைக்கிளில் ஆதனக்கோட்டை கடைவீதிக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பும்வழியில், சோழகம்பட்டி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியது. இதில், மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்த ஆதனக்கோட்டை போலீஸாா், தனியாா் கல்லூரிப் பேருந்தை ஓட்டிவந்த மங்களாகோவில் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன் ( 52 ) என்பவரைக் கைதுசெய்து மேலும் விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT