புதுக்கோட்டை

மன்னா் கல்லூரி மாணவா்கள் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம்

13th Mar 2020 08:18 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி தலைமை வகித்து, ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். 

ஊா்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக சென்று நகா்மன்றத்தில் நிறைவுபெற்றது. 

இதில் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சேதுராமன், வரலாற்றுத் துறைத் தலைவா் பனிதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் வேலு, இளையோா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் முருகையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT