இலுப்பூா் அருகேயுள்ள ஆலத்தூரில் சனிக்கிழமை (மாா்ச் 14) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
இதற்காக வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியில் இரு புறங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி, காளைகளைப் பரிசோதிக்கும் இடம், காவல்துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை முகாம்கள் அமைக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பணிகளை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.