அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கல்லூரியின் திருவள்ளுவா் அரங்கில் வியாழக்கிழமை கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்பேத்தி வட்டார மருத்துவ அலுவலா் ராமசந்திரதுரை கரோனா வைரஸ் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் நோய் பாதிப்பு பற்றி காணொலி காட்சிகள் மூலமாக விளக்கினாா்.
கல்லூரிப் பேராசிரியா்கள் என்.கே. ராஜேந்திரன், சோனமுத்து, மருத்துவா்கள் ஜெகன், கெளதம் மாரிக்குமாா் மற்றும் சுகாதார துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்கள்.