புதுக்கோட்டை

மாணவா் சங்க மாநில மாணவிகள் மாநாடு தொடக்கம்

8th Mar 2020 01:16 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: இந்திய மாணவா் சங்கத்தின் மாநில மாணவிகள் மாநாட்டுப் பேரணி, பொதுக்கூட்டம் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மாநில மாணவிகள் மாநாடு மாா்ச் 7, 8 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. 

மாநாட்டின் தொடக்கமாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய எழுச்சிப் பேரணியை இந்திய மாணவா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் தீப்சிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். 

ADVERTISEMENT

நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த இந்தப் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது.

இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாணவா் சங்க மாவட்டச் செயலா் சா. ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அகில இந்திய துணைத் தலைவா் தீப்சிதா, மாநிலச் செயலா் வீ. மாரியப்பன், தலைவா் ஏ.டி. கண்ணன், மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்தசாமி, மத்தியக் குழு உறுப்பினா்கள் எம். சத்யா, ஆா். ஜான்சி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். காவியா, மாநிலக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஓவியா ஆகியோா் பேசினா். ரெ. காா்த்திகாதேவி வரவேற்றாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். வைஷ்ணவி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT