புதுக்கோட்டை

மரம் நட்டு மகளிா் தினக் கொண்டாட்டம்

8th Mar 2020 01:17 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவிகள் உலக மகளிா் தினத்தை கல்லூரி விளையாட்டுத் திடலில் ‘மரம் நண்பா்கள்‘ அமைப்புடன் இணைந்து சனிக்கிழமை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினா். 

இந்நிகழ்வில் தேசிய மாணவா் படை கட்டளைதாரா் பகுத்தறிவாளன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளா் மு. பா்குணன்,  கல்லூரித் திட்ட அலுவலா் வே. முருகையன், இந்தியன் ரெட் கிராஸ் மாவட்டச் செயலா் ஜெ. ராஜாமுகமது, மரம் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த மருத்துவா் ஜி. எட்வின், காா்த்திக் சா. மூா்த்தி, ரியாஸ்கான், பேராசிரியா் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT