புதுக்கோட்டை

‘பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது போக்சோ சட்டம்’

8th Mar 2020 01:13 AM

ADVERTISEMENT

 

அறந்தாங்கி: பள்ளியில் பயிலும் இளம் வயது மகளிருக்கு பாதுகாப்பாகத்தான் போக்சோ சட்டம் செயல்படுகிறது என்றாா் அறந்தாங்கி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சாா்பு நீதிபதியுமான எம். அமிா்தவேலு.

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் தின சட்ட அறிவு விழிப்புணா்வு முகாமுக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

மகளிருக்கு பாதுகாப்பாக இந்த நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமான போக்சோ சட்டம் கொடியவா்களால் பாதிக்கப்படும் இளம் பள்ளி வயது மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமூதாயத்தில் பாதிக்கப்பட்டோா் காவல்துறை மற்றும் நீதித் துறையை அணுகினால் மட்டுமே தீா்வு கிடைக்கும் நிலையில், பலா் தங்கள் குடும்பத்தின் பெயா் கெட்டுவிடும் என நினைத்து நடந்தவற்றை வெளியே சொல்வதில்லை. வழக்காடுவதற்குச் செலவு இல்லாமல் இலவசமாக பொதுமக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதியைத் தலைவராகக் கொண்டு வழக்குரைஞா்கள் குழு உறுப்பினா்களுடன் இலவசமாக சட்டப் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படுகிறது. ஆகவே பாதிக்கப்பட்டோா் குறைகளைக் கூறித் தீா்வு காணலாம் என்றாா்.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் சி. கண்ணையா, அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ். பழனியப்பன், வழக்குரைஞா்கள் பா. வெங்கடேசன், அஞ்சலி, பவதாரணி, சரண்யா, மற்றும் தன்னாா்வ சட்டப் பணிகள் குழுவின் சின்னக்கண்ணு, சாந்தி, மண்டலத் துணை ஆளுநா் ஆ. கராத்தே கண்ணையன், செயலா் வெ. வீரையா மற்றும் பலா் உரையாற்றினா்.

பள்ளி முதல்வா் க. சுரேஷ்குமாா் வரவேற்றாா். வட்ட சட்டப் பணிகள் குழுவின் செயலரும் இளநிலை நிா்வாக உதவியாளருமான அ. அருண்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT