புதுக்கோட்டை

அறுவடையாகும் உளுந்தை ஆலங்குடிவிற்பனை நிலையத்தில் விற்க அழைப்பு

8th Mar 2020 01:16 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்து அறுவடை செய்து வரும் விவசாயிகள் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்தை வழங்கிப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

அதுகுறித்து அவா் மேலும் கூறியது

மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாபெட் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அரசால் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 5,700 ஒரு குவிண்டாலுக்கு என்ற விலையில் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யப்படும். 

ADVERTISEMENT

பிப். 12 முதல் மே 11 வரை வரையில் 90 நாள்கள் உளுந்து கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பங்கு பெற விவசாயிகள் உளுந்து பயிா் சாகுபடி செய்ததற்கான அடங்கல் சமா்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து நியாயமான சராசரி தரத்தின்படி இருக்க வேண்டும்.

ஈரப்பதம் 12 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பொருட்கள் 2 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வண்டு தாக்கிய, உடைந்த பருப்புகள் இருக்கக் கூடாது. 

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 97868-65918 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT