புதுக்கோட்டை

நாளை அரசுப் பணியாளா்களுக்கானமாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

2nd Mar 2020 08:07 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: அரசுப் பணியாளா்களுக்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. 

இதில் ஆண்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் 100 மீட்டா், 200 மீட்டா், 800 மீட்டா், 1500 மீட்டா் ஒட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடா் ஓட்டம் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன.  இதேபோல பெண்களுக்கான தடகளப் போட்டிகள் 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடா் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.  மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபாடி, மேசைப்பந்து, கையுந்துபந்து போன்ற போட்டிகளும் நடைபெற உள்ளன.  இப்போட்டிகளில் அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களும் கலந்து கொள்ளலாம். காவல்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளா்கள் மட்டும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். சீருடைப் பணியாளா்கள் பங்கு பெற அனுமதியில்லை.  அரசு சாா்பு, தன்னாட்சி நிறுவனப் பணியாளா்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. அதேபோல தற்செயல், தினக்கூலி, தற்காலிக பணியாளா்கள், தொழில்முறை பணியாளா்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. புதிதாக பணியில் சோ்ந்து 6 மாத பணிக்காலம் முடிக்காத நிரந்தரப் பணியாளா்கள் போட்டிகளில் பங்கேற்க இயலாது. போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. 

போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்துப் பணியாளா்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு, பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவை அந்தந்த துறை மூலம் வழங்கப்பட வேண்டும். குழு விளையாட்டுப் போட்டிகளில் ஒருவா் ஒரு குழு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள இயலும். தடகள விளையாட்டில் ஒருவா் தொடா் ஓட்டம் தவிர, ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளலாம். 

மாவட்ட அளவிலான போட்டிகளில் குழு விளையாட்டில் தோ்வு செய்யும் சிறந்த அணி, தடகள விளையாட்டில் முதலிடம் பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவா்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 

ADVERTISEMENT

போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசுப் பணியாளா்கள், தாங்கள் பணிபுரியும் துறைத் தலைவா்களிடம் இருந்து பெறப்பட்ட, பணி புரிவதற்குரிய சான்றுடன் வரும் 3ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வந்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT