புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே வடமாடு நிகழ்ச்சி

2nd Mar 2020 08:11 AM

ADVERTISEMENT

 

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள களப்பக்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 காளைகள், 135 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

களப்பக்காடு ஆலமரத்து முனீஸ்வரா் கோயிலில் சந்தனக் காப்பு உத்ஸவத்தை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு நிகழ்ச்சியை சனிக்கிழமை இரவு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைக்கு தலா 9 போ் வீதம் மொத்தம் 135 மாடுபிடி வீரா்கள் களம் இறங்கினா். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதி, அதிமுக நகரச் செயலாளா் ஆதி. மோகனகுமாா், திமுக நகரச் செயலாளா் இரா. ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் உதயம் சிவசங்கா், அமமுக அமைப்புச் செயலாளா் க.சிவசண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT