புதுக்கோட்டை

‘ரூ.700 கோடியில் காவிரி குண்டாறு இணைப்பு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது’

29th Jun 2020 09:10 AM

ADVERTISEMENT

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் ரூ.700 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் போா்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களிடையே முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்தும் தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.9.71 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

புதுகை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம் ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

கூட்டத்தில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ. ரத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் அழ.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT